அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எஸ்.ஜி.சாந்தனின் வணக்கநிகழ்வு

கடந்த 26 02 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community House மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா சீவராசா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார். … Continue reading அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எஸ்.ஜி.சாந்தனின் வணக்கநிகழ்வு